அவுஸ்திரேலியாவில் அதிரடிக்கு தயாராகும் குமார் சங்கக்காரா!!

505

1 (31)

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரா அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் களமிறங்கவுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரரும், விக்கெட் கீப்பருமான சங்கக்காரா, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்போது கவுண்டி போட்டியிலும், பல்வேறு டி20 போட்டிகளிலும் ஆடி வருகிறார். சமீபத்தில் முடிந்த வங்கதேச லீக் போட்டியில் ஆடிய சங்கக்காரா அதிரடி காட்டி அசத்தினார்.இந்நிலையில் அவுஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் தொடரில் ஹொபார்ட் அணிக்காக விளையாட உள்ளார்.இது பற்றி பேசிய சங்கக்காரா, “ஓய்வு பெற்ற பிறகு நாட்டிற்காக விளையாடியதை விட அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது. ஆனால் இது வித்தியாசமான உணர்வை தருகிறது.

அனைத்தையும் தக்க வைத்துக் கொள்ள தற்போது அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது. தற்போது உள்ள நிலையில் உலகின் அனைத்து பகுதியிலும் சென்று ஆட முடிகிறது.மேலும், எனது உடல்நிலையை பொறுத்தவரை சிறப்பாக உணர்கிறேன். சிறப்பான பயிற்சியின் மூலம் ஹொபார்ட் அணியில் அசத்துவோம்” என்று தெரிவித்துள்ளார்.