ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாமல் 100வது ஒருநாள் போட்டியில் ஆடிய ரோகித் ஷர்மா!!

337

rohit

சிம்பாவேக்கெதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு 100வது ஒருநாள் போட்டியாகும். ஒரு ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் ரோகித் ஷர்மாவுக்கு இந்த போட்டி நினைவில் கொள்ளத்தக்கதாக அமையாமல் போகலாம்.

ஆனால் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாத ரோகித் ஷர்மா 100வது ஒருநாள் போட்டியில் விளையாடி இருப்பது ஒரு வகையில் சாதனையாகும். அதாவது இதற்கு எந்தவொரு வீரரும் டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் 100 ஒருநாள் போட்டியை கடந்தது கிடையாது.

டெஸ்ட் போட்டியில் கால் பதிக்காமல் 100 ஒருநாள் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை 30 வயதான ரோகித் ஷர்மா பெற்றுள்ளார். 100 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் ரோகித்ஷர்மா 2 சதம், 17 அரை சதத்துடன் 2480 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

டெஸ்ட் போட்டியில் அறிமுகம் காணாமல் அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய சிறந்த –5 வீரர்கள்:

ரோகித் ஷர்மா (இந்தியா) – 100 போட்டிகள்
பொலார்ட் (மேற்கிந்திய தீவுகள்) – 85 போட்டிகள்
ஜேம்ஸ் ஹோப்ஸ் (அவுஸ்திரேலியா) – 84 போட்டிகள்
இயான் ஹார்வே (அவுஸ்திரேலியா) – 73 போட்டிகள்
டேவிட் ஹசி (அவுஸ்திரேலியா) – 69 போட்டிகள்