முல்லைத்தீவில் செருப்பு குறும்படம் வெளியீடு!!

547

முள்ளியவளை நண்பர்கள் கலை வட்டத்தினரால் முல்லை வர்மன் இயக்கி நடித்த “செருப்பு” குறும்படம் நேற்று 18.12.2015 வெளியிடப்பட்டுள்ளது.

முள்ளியவளை ஆலடிச் சந்தியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் சங்கீத ஆசிரியர் திருமதி சாந்தி கமலகாந்தன் தலைமையில் ஆரம்பமாகிய நிகழ்வினை சிம்மக்குரலோன் நாகேந்திரராசா தொகுத்து வாங்கியிருந்தார்.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வின் வரவேற்புரையினை முல்லை றமணன் (தவராசா) நிகழ்த்த, ஈழத்து இளம் நடிகர் ஜெராட் நோயல் வெளியீட்டுரையினை நிகழ்த்தி செருப்பு குறும்படத்தை திரையிட்டு வைத்தார்.

குறும்படத்திற்கான விமர்சன உரையினை ஈழத்து இளம் இயக்குனர்களில் ஒருவரான என்.எஸ் நிலான் நிகழ்த்தினார். தொடர்ந்து வே.முல்லைத்தீபன் ‘படைப்பாளிகளும் படைப்புக்களும்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றியிருந்தார்.

வாழ்த்துரைகள் வரிசையில் கனடா படைப்பாளிகளின் உலக நிறுவுனர் ஐங்கரன், வள்ளுவர்புரம் யோ.புரட்சி, புதுக்குடியிருப்பு ஜெயம் ஜெகன் ஆகியோர் நிகழ்த்தினர்.

இறுதி நிகழ்வாக முல்லை வர்மனின் ஏற்புரையுடன் கூடிய நன்றியரையுடன் செருப்பு குறும்பட வெளியீடு முடிவடைந்தது.

3 4 5 6 7 8 9 10 11