வரவுசெலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை!!

218

Budget-2016

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இதுவாகும்.

நவம்பர் மாதம் 20 ஆம் திகதி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டிருந்தது. பின்னர்21ம் திகதி முதல் டிசம்பர் மாதம் 02ம் திகதி வரை வரவு செலவு திட்டம் மீதான இரண்டாம் கட்ட விவாதம் இடம்பெற்றது.

இதனையடுத்து இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு கடந்த 2ம் திகதி இடம்பெற்றதுடன் அது மேலதிக வாக்குகளினல் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 3ம் திகதி முதல் இன்று மாலை வரை மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இடம்பெற்றதன் பின்னர் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

எவ்வாறாயினும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட தொடர் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பல்வேறு தடவை வரவு செலவு திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரினால் மாற்றங்கள் மேள்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.