
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி படுகொலை செய்த ஆட்டோ சாரதியான கணவனை சென்னை பொலிஸார் தேடி வருகின்றனர். மனைவி பணக்கார வீடுகளுக்கு சென்று வேலை செய்து வருவதனால் மனைவி மீது சந்தேகப்படும் ஆட்டோ சாரதியான கணவர் அடிக்கடி மனைவியுடன் சண்டை போடுவது வழக்கம்.
நேற்று மாலை வழக்கம்போல வேலைக்கு போய் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் மனைவியுடன் சண்டை போட்ட கணவர் சண்டை உச்சகட்டமாகியதால் திடீரென்று சமையல் அறையில் கிடந்த கத்தியை எடுத்து சரமாரியாக மனைவி மீது குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மனைவி உயிரிழந்ததால் கணவன் உடனே தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் குறித்த ஆட்டோ சாரதியை தேடி பொலிஸ் வலை வீசியுள்ளது.
இந்த படுகொலை சம்பவம், நேற்று மாலை சென்னை அபிராமபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.





