நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்: தமிங்க பிரசாத்க்கு பதிலாக நுவான் குலசேகரா!!

474

 

nuwan_001

நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இலங்கை அணியில் நுவான் குலசேகரா சேர்க்கப்பட்டுள்ளார்.இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது விளையாடி வருகிறது.

இதில் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. 2வது டெஸ்ட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி முடிந்தவுடன் ஒருநாள் தொடர் 26ம் திகதி தொடங்குகிறது.

முன்னதாக நடந்த நியூசிலாந்து போர்டு பிரெசிடென்ட் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் தமிங்க பிரசாத்க்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் விலகினார்.

இந்நிலையில் அவருக்கு பதிலாக புதுமுக வீரர் விஷ்வா பெர்னாண்டோ டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.ஆனால், ஒருநாள் தொடரில் அனுபவ வீரர் வேண்டும் என்பதால் நுவான் குலசேகராவை இலங்கை அணி தெரிவு செய்துள்ளது.