தலைமுடி கொட்டுகிறதா? இதோ தீர்வு தரும் வெங்காயம்!!

378

hair2

வெங்காயம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி தலைமுடி பிரச்சனைக்கும் தீர்வாக உள்ளது.வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுகிறது.

எவ்வாறு பயன்படுத்தலாம்?

* வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரம் 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 1 லிட்டர் வெதுவெதுப்பான நீரில் கலந்து, ஷாம்பு போட்டு தலைக்கு குளித்து முடித்த பின், இறுதியில் அந்த கலவையைக் கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

இப்படி தலைக்கு குளிக்கும் போது செய்து வந்தால், முடியின் வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பு: இந்த முறையை பின்பற்றினால் அடுத்த முறை தலைக்கு ஷாம்பு போடும் வரை தலையில் வெங்காயத்தின் வாசனை இருக்கும்.

* 1 டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் கலந்து, அந்த எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை மட்டும் தான் பின்பற்ற வேண்டும்.

* ஒரு சிறு வெங்காயத்தை அரைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 கப் பீர் சேர்த்து கலந்து, தலையில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு தலையை அலச வேண்டும். இந்த மாஸ்க்கையும் வாரம் ஒருமுறை தான் மேற்கொள்ள வேண்டும்