12 மணிநேர மூளை அறுவைசிகிச்சையின் போது இசைக்கருவியை இசைத்த இசைக்கலைஞர் !!

311

Jazz-musician-plays-saxophone-while-undergoing-brain-surgery

இசைக் கலைஞர் ஒருவர் தனக்கு மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர மூளை அறுவைச் சிகிச்சையின் போது, வாயால் காற்றை ஊதி இசைக்கும் சாக்ஸபோன் இசைக் கருவியை இசைத்த சம்பவம் ஸ்பெயினில் இடம்பெற்றுள்ளது.

கார்லொஸ் அகுயிலெரா (27 வயது) என்ற மேற்படி இசைக் கலைஞர், தனது மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியொன்றை அகற்றுவதற்காக மலாகா நகரிலுள்ள கார்லொஸ் ஹாயா மருத்துவமனை சத்திரசிகிச்சை கூடத்தில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது இவ்வாறு இசைக்கருவியை இசைத்துள்ளார்.சத்திரசிகிச்சையில் பங்கேற்ற நரம்பியல் சத்திரசிகிச்சை நிபுணர்களை உள்ளடக்கிய 16 மருத்துவ உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அவர் இவ்வாறு இசைக்கருவியை இசைத்துள்ளார்.

அவரது இசைக்கருவியை இசைக்கும் ஆற்றல் மேற்படி மூளை அறுவைச்சிகிச்சையின் போது பாதிக்கப்படாதிருப்பதை உறுதி செய்து கொள்ளும் முகமாகவே அவர் இவ்வாறு அறுவைச்சிகிச்சையின் போது இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருந்துள்ளார்.அவருக்கு சத்திரசிகிச்சையின் போது வலிநீக்கி மருந்துகள் வழங்கப்பட்டிருந்தன.கார்லொஸ் அகுயிலெரா முன்னணி இசைக் குழுவொன்றில் சாக்ஸபோன் வாத்தியக் கலைஞராக பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சத்திரசிகிச்சை தொடர்பில் அவர் கூறுகையில்,”இசை இல்லாமல் நான் இல்லை” என்று கூறினார். ஐரோப்பிய மருத்துவமனையொன்றில் இத்தகைய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மூளைக் கட்டியை அகற்றுவதற்கான அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக அமைந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.