வவுனியா மற்றும் புத்தளத்தில் பாதையை மறித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!

646

வவுனியா மற்றும் புத்தளத்தில் இருவேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று காலை பொதுமக்கள் பாதையை மறித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டாக்காலி மாடுகளின் தொல்லையை கட்டுப்படுத்தவும், நெடுஞ்சாலைகளில் கட்டாக்காலி மாடுகள் நடமாடுவதை கட்டுப்படுத்தவும் கோரி வவுனியாவில் பொதுமக்கள் இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா- திருமலை வீதியின் கச்சக்கொடித்தீவு பிரதேசம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதியின் போக்குவரத்தும் சற்று நேரம் தடைப்பட்டிருந்தது.

இதற்கிடையே மதுரங்குளி மொக்குத்துடுவாய் பாதையை சீரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்து புத்தளம்- கொழும்பு பிரதான பாதையில் பொதுமக்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் அனைத்து தரப்பினருக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

சீரமைத்துத் தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்த மொக்குத்துடுவாய் பாதையானது புத்தளம்- கொழும்பு பிரதான பாதையில் இருந்து பத்துக் கிலோ மீற்றர் தூரம் உள்வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

1 2