ஃபேஸ்புக் நிறுவனம் அமைந்துள்ள மென்லோ பார்க் அருகே வீடுகளை மாற்றிக் கொள்வதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 10,000 டொலர் கொடுத்துவருகிறது.
இந்த 10,000 டொலரை பெறுவதற்கு, ஊழியர்கள் ஃபேஸ்புக் அலுவலகத்தில் இருந்து 16 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வாடகைக்கோ அல்லது சொந்தமாகவோ வீடு வாங்கி இருக்க வேண்டும் என ஃபேஸ்புக் நிறுவனத்தின் பணியாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மூன்று வருடங்களுக்கு முன்பு 60 நிமிட நேரத்தில் கடக்க கூடிய தூரத்தை இப்போது கடக்க 90 நிமிடங்கள் தேவை என்று ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட வாகனப்பெருக்கமே இந்த போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாகும்.