உலக அளவில் பிரபலமான தொலைபேசி குறுஞ்செய்திச் சேவையா வட்ஸ்அப்பின் பயன்பாட்டை பிரேசில் அதிகாரிகள் 48 மணி நேரம் தடைசெய்துள்ளனர்.
பிரேசிலில் நடைபெற்று வந்த குற்றவியல் வழக்கு ஒன்றில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஒத்துழைக்க மறுத்த கலிபோர்னியான நிறுவனமான வட்ஸ்அப்பின் சேவையை 48 மணி நேரம் நிறுத்தி வைக்குமாறு, பிரேசில் மாநில நீதிபதி சோ பௌலோ உத்தரவிட்டுள்ளார்.
உலகின் மற்ற பகுதிகளிலிருந்து பிரேசில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதைக் காண்பது கவலையளிக்கிறது என்று வட்ஸ்அப்பின் தலைமை நிர்வாகி ஜான் கோம் தெரிவித்துள்ளார்.
மேலும், வட்ஸ்அப் மீதான தடை அமுலுக்கு வந்த சில மணிகளுக்குள் அதன் போட்டி சேவை நிறுவனம் ஒன்று 10 இலட்சத்துக்கும் அதிகமான புதிய பயன்பாட்டாளர்களை கையாள்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.