இலங்கையின் சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதி!!

578

Speed

இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதியை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு தேசிய அதிவேக இணையத்தள வேலைத்திட்டம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்துதல் ஆணைக்குழு ஆகியவற்றுடன் ஒன்றிணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது சில பாடசாலைகளுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ள 128 Kbps இணையத்தள சேவைக்கு பதிலாக வேகமாக செயற்படக்கூடிய நவீன தொழில்நுட்பத்துடனான 10 Mbps – 100 Mbps வரையான வேகமான இணைய வசதி சகல பாடசாலைகளுக்கும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக கொழும்பு காலி மற்றும் கண்டி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய வகையில் தெரிவு செய்யப்பட்ட 60 பாடசாலைகளுக்கு இணையத்தள வசதிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன் அதிவேக இணைய வசதியை எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. தற்போது பாடசாலைகளுக்காக வழங்கப்படும் இணைய வசதிகளுக்காக கல்வி அமைச்சு மாதாந்தம் 17 இலட்சம் வரையில் செலவிட்டு வருவதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.