சட்டவிரோத ஆவணங்கள் மற்றும் போதைபொருட்களுடன் 4 பேர் யாழ்ப்பாணத்தில் கைது!!

521

1 (8)

ஹெரோயின் போதை பொருட்கள் மற்றும் சட்டவிரோத கடவூட்சீட்டுக்களை தம்வசம் வைத்திருந்த நான்கு பேர் யாழ்ப்பாண காவல்துறையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த அதி சொகுசு ரக சிற்றூர்தி ஒன்றையும் காவல்துறையில் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களிடம் இருந்து, கஞ்சா, ஹெரோயின் வகையை சேர்ந்த திரவ போதைப் பொருட்கள், துகள் வடிவிலான போதைப் பொருட்கள் மற்றும் அவர்களது உரிமையற்ற வெளிநாட்டு கடவூச்சிட்டுக்கள் ஜந்தும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கொழும்பு கொட்டாஞ்சேனை மற்றும் கிரான்பாஸ் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.