வவுனியாவில் ஆலயத்தை உடைத்து திருட்டு!!

544

வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவில் உடைத்து திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ஆலய பரிபாலனசபையினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். இது குறித்து ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கையில்,

திருவெம்பாவை பூசை வழிபாடுகள் இடம்பெற்று வரும் கோவிலில் மூலஸ்தான விக்கிரகம் உட்பட சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த பரிவார விக்கிரகங்களும் உடைக்கப்பட்டுள்ளதுடன் உண்டியலும் உடைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பூஜை வழிபாடுகளுக்காக மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கம் ஆலயத்தின் பிரதான வாயிலில் போடப்பட்டுள்ளதுடன் பண முடிச்சும் அதன் அருகில் காணப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஆலயத்தினுள் காணப்பட்ட இலத்திரனியல் பொருட்கள் வைக்கப்பட்ட அறை உடைக்கப்பட்டு இலத்திரனியல் உபகரணங்களுக்கு நீர் ஊற்றப்பட்டுள்ளது.

இன்று காலை ஆலயத்தில் திருவெம்பாவை பூஜைக்காக சென்றபோதே ஆலயம் உடைக்கப்பட்டுள்ளதை அவதானித்தவர்கள் உடன் பொலிஸாருக்கு இத் தகவலை அறிவித்துள்ளதுடன் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 2