வவுனியா செட்டிகுளத்தில் புகையிரதம் மோதுண்டு ஒருவர் மரணம்!!

1019

1939611_550123931809493_1495764572275211919_n-225x300

வவுனியா நேரியகுளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு நேற்று மாலை ஒருவர் பலியாகியுள்ளார். நேரியகுளத்தை சேர்ந்த துரைச்சாமி என்ற 47 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு புகையிரத்தில் மோதுண்டுள்ளார்.

மதவாச்சியில் இருந்து மன்னார் நோக்கி மாலை புகையிரதம் சென்றுகொண்டிருந்த போது நேரியகுளம் பகுதியில் புகையிரத பாதையில் தூங்கிக்கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இறந்த நபருடன் சென்ற மற்றவர் புகையிரத பாதைக்கு அருகில் தூங்கிக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.