காதலியுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட 12,000 மைல்கள் மிதிவண்டி மிதித்த காதலன்!!

390

cycling_home_xmas_004

பிரித்தானியாவில் இருக்கும் காதலியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் பொருட்டு அவுஸ்திரேலியாவில் இருந்து 12,000 மைல்கள் மிதிவண்டி மிதித்துள்ளார் காதலன் ஒருவர்.

பிரித்தானியாவின் Horwich பகுதியில் குடியிருக்கும் Jimmy Hailwood என்பவர் அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வருகிறார்.பிரித்தானியாவில் இருக்கும் தமது காதலியுடன் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாடும் பொருட்டும், பண்டிகையை முன்னிட்டு தொண்டு நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டும் Hailwood மிதிவண்டி பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இருந்து துவங்கும் இந்த மிதிவண்டி பயணத்தின் இடையே தொண்டு நிறுவனங்களுக்கான நிதியையும் சேகரிக்க முடிவு செய்துள்ளார்.இதனையடுத்து அவுஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து விமானம் மூலம் பாலியின் Denpasar பகுதிக்கு வந்த அவர், அங்கிருந்து இந்தியா வரை மிதிவண்டியில் கடந்துள்ளார்.

இந்தியா தலைநகர் டெல்லியில் இருந்து மீண்டும் Bishkek பகுதிக்கு விமானத்தில் புறப்பட்ட Hailwood, அங்கிருந்து மிதிவண்டியில் பிரித்தானியாவின் Horwich வந்து சேர்ந்துள்ளார்.இந்த பயணத்தின் இடையே 17,000 பவுண்டுகள் நிதி சேகரித்த அவர் அதனை Lancashire பகுதியில் அமைந்துள்ள குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்றிற்கு வழங்கியுள்ளார்.

Hailwood கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது உடன் இருப்பது மகிழ்ச்சியான ஒன்று என தெரிவித்துள்ள அவரது காதலி Ashton,குழந்தைகள் காப்பகத்திற்கு நிதி திரட்டும் பொருட்டு 12,000 மைல்கள் மிதிவண்டியில் பயணம் செய்துள்ளது கடினமான முயற்சி என்றபோதும் இரட்டிப்பு மகிழ்ச்சியை தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.