சீனாவில் கோலாகலமாக நடைபெற்ற Miss World 2015: உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட ஸ்பெயின் நாட்டு பெண்!! (வீடியோ இணைப்பு)

687

miss_world_003

சீனாவில் நடைபெற்ற மிஸ் வோர்ல்ட் 2015 போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா என்பவர் உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.சீனாவில் சான்யா நகரில் உள்ள பியூட்டி ஓப் கிராவுன் அரங்கத்தில் 65வது மிஸ் வோர்ல்ட் போட்டி நடைபெற்றது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 114 அழகிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

இதனால் நகரம் முழுவதுமே விழா கோலம் பூண்டது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த மிரியா லாலகுனா ரொயா( Mireia Lalaguna Rozo) என்பவர் 2015 ஆம் ஆண்டின் மிஸ் வோர்ல்டாக தெரிவு செய்யப்பட்டார்.அவருக்கு 2014ஆம் ஆண்டு மிஸ் வோர்ல்டாக தெரிவு செய்யப்பட்ட ரொலினி(Rolene Strauss) ஸ்ட்ராஸ் மகுடத்தை சூட்டினார்.

2வது இடத்துக்கு ரஷ்யாவின் சோஃபியா நிகித்சுக் மற்றும் மூன்றாவது இடத்துக்கு இந்தோனேஷியாவின் மரியா ஹர்ஃபண்டி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.பார்சிலோனாவை சேர்ந்த மிரியா தற்போது மருந்தாக்கவியல் தொடர்பாக படித்து வருகிறார்.

மேலும் தற்போதுதான் முதல் முறையாக ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒருவர் மிஸ் வோர்ல்டாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.முன்னதாக சீனாவின் மனித உரிமைகள் தொடர்பாக பேசிய கனடா அழகிக்கு விசா மறுக்கப்பட்டதால் அவர் இந்த போட்டியில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.