பாலியல் துஷ்பிரயோகம்- முதியவருக்கு விளக்கமறியல்!!

430

1 (11)

திரு­கோ­ண­மலை ஜயந்­தி­புர பகு­தியில் ஏழு வயது சிறு­மி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய ஒரு­வரை எதிர்­வரும் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கந்­தளாய் நீதி­மன்ற நீதிவான் ருவான் திஸா­நா­யக்க திங்­கட்­கி­ழமை உத்­த­ர­விட்டார். ஜயந்­தி­புர, வான்­எல, பகு­தியைச் சேர்ந்த எம். விஜ­ய­ரத்­தின (வயது 53) என்­ப­வரே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வ­ராவார்.

சூரி­ய­புர பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஜயந்­திபுர பகு­தியில் கடைக்குச் சென்ற சிறு­மியை அழைத்து குறித்த 53 வய­து­டைய சந்­தேக நபர் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக பொலிஸார் தெரி­விக்­கின்­றனர்.

சிறு­மியின் வீட்டின் அரு­கிலே சந்­தேக நபர் தனி­மையில் வசித்து வந்­துள்­ள­தா­கவும் பொலிஸார் தெரி­விக்­கின்­றனர். குறித்த சிறு­மியின் பெற்றோர் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்து சந்­தேக நபரை கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை கைது செய்து. ஜயந்­தி­புர பொலிஸார் மறு நாள் திங்­கட்­கி­ழமை கந்­தளாய் நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போதே அவரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்டார். சிறுமி வைத்­திய பரி­சோ­த­னைக்­காக கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற் றிய மேலதிக விசாரணைகளை சூரியபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.