
2016 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உர மாணியம் தடுக்கப்பட்டுள்ளமையால், எதிர்வரும் காலங்களில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என ஐக்கிய விவசாய முன்னணி தெரிவித்துள்ளது.
விவசாயிகளினது பிரச்சினைகளை ஆராய்வதற்கு உருவாக்கப்பட்ட இந்த முன்னணியினது முதலாவது ஊடக சந்திப்பு நேற்று கொழும்பில் இடம் பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் இணைந்து கொண்ட ஐக்கிய விவசாய முன்னணியின் செயளாலரும், தேசிய சுதந்திர முன்னணியின் அரசியல் குழு உறுப்பினருமான பியசிரி விஜயநாயக்க இதனை தெரிவித்தார்.





