அமெரிக்காவிடம் இருந்து ஆயுதம் தாங்கிய 100 ஆளில்லா விமானங்களை வாங்கும் இந்தியா!!

549

drone_002

அமெரிக்காவிடம் இருந்து ரூ.13 ஆயிரம் கோடி செலவில் ஆயுதம் தாங்கிய 100 ஆளில்லா நவீன ரக விமானங்களை வாங்குவதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்திய எல்லைப்பகுதியில் சீன அத்துமீறலை தடுப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புக்காக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடக்கூடிய இந்த விமானங்களை வாங்க இந்தியா ஆர்வமாக உள்ளது.

இதுதொடர்பான பேச்சுவார்த்தை பல மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் அமெரிக்கா எந்த உறுதியையும் தரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.