கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இப்பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.
நாடு முழுவதிலுமுள்ள 2,164 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார தெரிவித்தார்.