44 யானைக் குட்டிகள் சட்ட விரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன!!

617

4-2

சட்டவிரோதமான முறையில் 44 யானைக் குட்டிகளை தடுத்து வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவிக்கின்றார்.அதில் 28 யானை குட்டிகளை வனவிங்குகள் திணைக்களம் பொறுப்பேற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதுதவிர சுங்க திணைக்ளத்தின் பொறுப்பில் உள்ள யானைத் தந்தங்களை அழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.