கல்லெறிந்து கொள்ளும் தண்டனை 3 வருட சிறைத்தண்டனையாக மாற்றம்!!

468

Stoning

சவூதி அரே­பி­யாவில் தவ­றான பாலியல் உறவைப் பேணிய குற்­றச்­சாட்டின் பேரில் இலங்கைப் பணிப் பெண் ஒரு­வ­ருக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட கல்­லெ­றிந்து கொல்லும் மரணதண்­டனை தீர்ப்பை அந்­நாட்டு நீதி­மன்றம் மூன்று வருட சிறைத்­தண்­ட­னை­யாக மாற்­றி­ய­மைத்­துள்ள­தாக இலங்கை வெளிவிவகார அமைச்சும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சும் நேற்று அறிவித்தன.

நேற்­றைய தினம் வெளி­வி­வ­கார அமைச்சில் இடம்­பெற்ற விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்ட வெளி­வி­வ­கார பிர­தி­ய மைச்சர் ஹர்ஷ டி சில்வா,வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள ஆகி­யோரே இந்த அறி­விப்பை வெளி­யிட்­டனர்.

கல்­லெ­றிந்து கொல்லும் தண்­ட­னை­யி­லி­ருந்து குறித்த பெண்ணைக் காப்­பாற்றும் வகையில் இலங்கை அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக மேற்­கொண்டு வந்த முயற்­சி­களின் பல­னாக இத் தீர்ப்­பினை மீள்­ப­ரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்­திய சவூதி அரே­பி­யாவின் தவாத்மி நீதி­மன்றம் நேற்றுமுன்­தினம் அதனை மூன்று வருட சிறைத் தண்­ட­னை­யாக குறைத்­துள்­ள­தாக அமைச்­சர்கள் நேற்று தெரி­வித்­தனர்.

இவ் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் வெளி­வி­வ­கார பிர­தி­ய­மைச்சர் ஹர்ஷ டி சில்வா, வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள ஆகியோர் தொடர்ந்தும் கருத்து வெளி­யி­டு­கையில்,

இலங்கைப் பணிப் பெண்­ணுக்கு எதி­ராக சவூதி அரே­பிய நீதி­மன்றம் வழங்­கிய தீர்ப்­புக்கு எதி­ராக நாம் மேன்­மு­றை­யீடு செய்­த­துடன் சவூ­தி­யி­லுள்ள இலங்கைத் தூத­ரகம் மூல­மாக அப் பெண்ணைக் காப்­பாற்­று­வ­தற்­கான முயற்­சி­க­ளையும் மேற்­கொண்டு வந்தோம். இதற்­க­மை­வா­கவே மரண தண்­ட­னை­யி­லி­ருந்து மூன்று வருட சிறைத் தண்­ட­னை­யாக தீர்ப்பு மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது.

குறித்த இலங்கைப் பணிப் பெண் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­கின்றார். அந்த வகையில் அவர் ஏற்­க­னவே ஒன்­றரை வரு­டங்­களை சிறையில் கழித்­து­விட்டார். எனினும் தற்­போது வழங்­கப்­பட்­டுள்ள 3 வருட சிறைத்­தண்­ட­னையில் மேற்­படி ஒன்­றரை வரு­டங்கள் கழிக்­கப்­ப­டுமா அல்­லது அவர் நேற்று முன்­தினம் தீர்ப்பு வழங்­கப்­பட்ட தினத்­தி­லி­ருந்து 3 வரு­டங்கள் சிறைத் தண்­டனை அனு­ப­விக்க வேண்­டுமா என்­பது இது­வரை தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது தொடர்பில் எதிர்­வரும் திங்கட் கிழமை எமக்கு தெளி­வான தகவல் கிடைக்கும் என நம்­பு­கிறோம்.

இவ்­வா­றான ஒரு தீர்ப்பு மீள்­ப­ரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு மாற்றி வழங்­கப்­பட்­டமை வர­லாற்றில் இதுவே முதல் முதல் தட­வை­யாகும். இலங்­கைக்கும் சவூதி அரே­பி­யா­வுக்­கு­மி­டை­யி­லான இரா­ஜ­தந்­திர உறவு மிகவும் வலு­வாக உள்­ளது என்­ப­தையே இந்தத் தீர்ப்பு வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது. இதற்­காக உழைத்த வெளி விவ­கார அமைச்சின் அதி­கா­ரிகள், வெ ளிநாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சின் அதி­கா­ரிகள், சவூ­தி­யி­லுள்ள இலங்கைத் தூதுவர் அஸ்மி தாஸிம், சவூதி அரே­பிய சட்­டத்­த­ர­ணிகள் ஆகி­யோ­ருக்கு நாம் நன்றி கூறக் கட­மைப்­பட்­டுள்ளோம்.

இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­களில் மிகக் கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக சவூ­தி­யி­லுள்ள இலங்கைத் தூதுவர் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்­குட்­ப­டுத்­தப்­பட்டார். எனினும் அவர் இது பற்றி அலட்டிக் கொள்­ளாது குறித்த பெண்ணை தண்­ட­னை­யி­லி­ருந்து காப்­பாற்­று­வ­தற்கு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டுள்ளார். அதற்­காக நாம் தூதுவர் அஸ்மி தாஸி­முக்கு விசேட நன்­றி­களைத் தெரி­வித்துக் கொள்­கிறோம் என்றார்.

கொழும்பைச் சேர்ந்த குறித்த பெண்மணி 2013 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்று அதே வருடம் தவறான பாலியல் உறவைப் பேணிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். 2014 இல் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.