
நான்கு வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த தாக நம்ப ப்படும் இளைஞர் ஒருவனை சம்பவம் இடம்பெற்று நான்கு மாதங்களின் பின்னர் கைது ஆனமடு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த செப்டெம்பர் மாதம் தனது உறவுக்காரக் குழந்தையையே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திஉள்ளார். ஆனமடுவ நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிக் கொண்டிருந்த குறித்த இளைஞரைச் சந்தேகத்தில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பின்னர் ஆனமடுவ பொலிஸார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது அவ்விளைஞர் வாரியபொல பொலிஸ் பிரிவில் தனது உறவுக்கார குழந்தையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் வாரியபொல பொலிஸாரால் தேடப்பட்டு வருபவர் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளனர்.





