தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நடந்து சென்ற மோடி? மீண்டும் சர்ச்சை கிளம்பியது!!

523

modi_russia_002

ரஷ்யாவில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பிரதமர் மோடி நடந்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா புறப்பட்டு சென்றுள்ளார்.மாஸ்கோ சென்றடைந்த அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது, நமது நாட்டின் தேசிய கீதத்தை வாசித்து, வீரர்கள் வரவேற்பு அளித்தனர்.

ஆனால் இதை கவனிக்காத மோடி நடந்து சென்றுள்ளார், பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படுவதை சுட்டிக் காட்டிய பின்னர் நின்று மரியாதை செலுத்தியுள்ளார்.இதேபோன்று ஜப்பான் பிரதமருடனான சந்திப்பின் போது, தேசிய கொடி தலைகீழாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.