கர்ப்பிணி தாயின் உயிரை காப்பாற்றிய 3 வயது சிறுமி: நெகிழ்ச்சி சம்பவம்!!

260

3year_protectmother_004

இங்கிலாந்தில் 3 வயது சிறுமி ஒருவர் தனது கர்ப்பிணி தாயின் உயிரை காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் Nailsea நகரில் வசித்து வரும் Catherine, 27 என்பவருக்கு 3 வயதில் Emma Bazzard என்ற பெண்குழந்தை உள்ளது.

இந்நிலையில் மீண்டும் கருவுற்றிருந்த Catherine-க்கு பிரசவவலி ஏற்பட்டடு சுயநினைவை இழந்து தரையில் சரிந்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து ஆண்குழந்தையை பெற்றெடுத்த அவரால் சுயநினைவுக்கு திரும்ப இயலவில்லை, மேலும் நஞ்சுக்கொடி கிழிந்துவிட்டதால் அவர் மேலும் உடல்வலிக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், இவருடைய மகள் Emma, அவசர சேவையின் தொலைபேசி எண்ணான 999 – ஐ தொடர்பு கொண்டுள்ளார்.

மறுமுனையில் பேசிய, தொலைபேசி அழைப்புகளை கையாளும் அதிகாரி Sarah Morris என்பவர், எம்மாவிடம், குழந்தை பிறந்துவிட்டடதா, என்ன குழந்தை, இருவரும் நலமாக இருக்கிறார்கள், உங்கள் வீட்டின் முகவரி என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆம், குழந்தை பிறந்துவிட்டது, ஆண் குழந்தை, அது அம்மாவின் குழந்தை, கிறிஸ்துமஸ்க்காக வருகை தந்துள்ளது என்று அந்த அதிகாரியிடம் Emma மிகத்தெளிவாக பதிலளித்துள்ளார். சுமார் 11 நிடங்கள் வரை தொடர்ந்து இந்த உரையாடலில், எம்மா தனது தாய் மற்றும் புதிதாக பிறந்த குழந்தையின் நிலைகள் பற்றி எடுத்துரைத்துக்கொண்டே இருந்துள்ளார்.

அவசரஊர்தியுடன் புறப்பட்ட ஊழியர்கள், எம்மாவின் வீட்டினை அடைந்து தாயையும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஊழியர்கள் வீட்டிற்கு செல்லும்வரை, தொலைபேசி அழைப்புகளை கையாளும் அதிகாரி எம்மாவுடன் உரையாடிக்கொண்டே இருந்துள்ளார்.

இரண்டு வார சிகிச்சைக்கு பின் cathrine மற்றும் குழந்தையும் நலமாக உள்ளனர், மேலும் அதிகாரி Sarah, 3 வயது சிறுமி Emma- வின் தைரியத்தையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டியுள்ளார்.