
இந்திய சுழற்பந்து வீச்சாளர் இலங்கையில் முதலீடு செய்ய உள்ளதாக இலங்கை நிதி அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.இது தொடர்பாக ஹர்பஜன் சிங், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை அவரது அலுவலகத்தில் சந்தித்து இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா, இலங்கை நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நீடித்து வரும் நட்புறவுகளின் அடிப்பையில் ஹர்பஜன் சிங் இலங்கையில் முதலீடு செய்ய விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரம் பாராளுமன்றத்தில் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய கருணாநாயக்க, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஊக்குவிப்பதாக தெரிவித்திருந்தார்.





