மேற்கிந்திய தீவு அணியை வீழ்த்தி 20-20 தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!!

363

Pakistani cricketers celebrating after the dismissal of a Indian player during the India-Pakistan 2nd Twenty20 International cricket match at Sardar Patel Stadium, Motera, Ahmedabad. (Photo: IANS)

பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 2வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது.

முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களை எடுத்தது. உமர் அக்மல் 36 பந்தில் 46 ஓட்டங்களும் தொடக்க வீரர் அகமது சேஷாத் 44 ஓட்டங்களும் எடுத்தனர்.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில் சுனில் நரின் 3 விக்கெட்டும் பத்ரி 2 விக்கெட்டும், டேரன் சேமி, பொலாட் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 136 ஓட்ட இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் அணி பின்னர் களம் இறங்கியது.

பாகிஸ்தான் வீரர்களின் அபார பந்து வீச்சால் மேற்கிந்திய தீவுகள் அணியால் இலக்கை நோக்கி முன்னேற முடியவில்லை. மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதனால் பாகிஸ்தான் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டரன் பிராவோ 35 ஓட்டங்களும் , சுனில் நரேன் 28 ஓட்டங்களும் எடுத்தனர். சோகைல் தன்வீர், சுல்பிதார் பாபா, அஜ்மல் தலா 2 விக்கெட்டும், ஹபிஸ், அப்ரிடி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 2–0 என்ற கணக்கில் 20 ஓவர் தொடரை கைப்பற்றியது. நேற்று முன்தினம் நடந்த முதலாவது 20 ஓவர் ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்று இருந்தது. ஒருநாள் தொடரையும் பாகிஸ்தான் அணி 3–1 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றியது.

மேற்கிந்திய தீவுகள் அணி தனது சொந்த மண்ணில் ஒரு நாள் தொடரையும், 20-20 தொடரையும் இழந்தது.