வோடபோன் நிறுவனத்திற்கு 1,263 கோடி இந்திய ரூபாய் அபராதம்..

443

வருமானத்தைக் குறைத்துக் காட்டிய வோடபோன் நிறுவனத்துக்கு 1,263 கோடி இந்திய ரூபாய் அபராதம் விதித்துள்ள இந்திய மத்திய தொலைத் தொடர்புத்துறை அறிக்கை அனுப்பியுள்ளது. 2008-09 மற்றும் 2010-11 ஆண்டுகளில் இந்த நிறுவனம் தான் ஈட்டிய வருமானத்தைக் குறைத்துக் காட்டி குறைவான வரியைக் கட்டியுள்ளது.

இதையடுத்து 2008-09ம் ஆண்டுக்கு ரூ. 715 கோடியும், 2010-11ம் ஆண்டுக்கு ரூ. 548 கோடியும் அபராதம் விதித்துள்ளது தொலைத் தொடர்புத்துறை. பெற்ற வருமானம் , அன்னிய செலாவணி மூலம் கிடைத்த வருமானம், வட்டி மூலம் கிடைத்த வருமானம் ஆகியவற்றை இந்த நிறுவனம் குறைத்துக் காட்டியுள்ளது. இதையடுத்து 15 நாட்களில் ரூ. 1,263 கோடி அபராதத்தைக் கட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் சீன தொலைத் தொடர்பு நிறுவனத்துக்கு அடுத்தபடியாக உலகின் 2வது மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாகும். Voice Data Fone என்பதன் சுருக்கமே வோடபோன். இந்த நிறுவனத்தின் Zoozoo விளம்பரங்கள் உலகப் பிரசித்தி பெற்றவையாகும்.