இளைஞரின் வயிற்றில் 45 ஹெரோயின் மாத்திரைகள் !!

748

a_adderall_02

மருந்து வில்­லைகள் போன்று சூட்­சு­ம­மாக தயா­ரிக்­கப்­பட்ட ஹெரோயின் வில்­லை­களை விழுங்கி நாட்­டுக்குள் கடத்தி வர முற்­பட்ட பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் கட்­டு­நா­யக்க விமான நிலைய போதைப்­பொருள் தடுப்புப் பிரிவு பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

போதைப்­பொருள் தடுப்புப் பிரி­வி­ன­ருக்கு கிடைத்த இர­க­சிய தகவல் ஒன்­றுக்­க­மைய இவர் கைது செய்­யப்­பட்­ட­தா­கவும் இதற்­காக வைத்­தி­யர்­களின் ஒத்­து­ழைப்­பையும் பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

இதுதொடர்பில் மேலும் அறி­ய­மு­டி­வ­தா­வது,

கடந்த செவ்­வா­யன்று இரவு 10.30 மணி­ய­ளவில் பாகிஸ்­தானில் இருந்து கட்­டு­நா­யக்க ஊடாக நாட்­டுக்குள் பிர­வே­சிக்க 22 வய­தான அந்­நாட்டு இளைஞர் ஒருவர் வருகை தந்­துள்ளார். குறித்த இளைஞர் போதைப்­பொருள் கொண்­டு­வ­ரு­வ­தாக ஏற்­க­னவே போதைப் பொருள் தடுப்புப் பிரி­வுக்கு தகவல் கிடைத்த நிலையில் பொலிஸார் உஷார் நிலையில் இருந்­துள்­ளனர்.

அந்த இளைஞர் விமான நிலை­யத்தை அ­­டைந்­ததும் அவரின் பயணப் பை முழு­வ­தையும் தீவிர சோத­னைக்கு பொலிஸார் உட்­ப­டுத்­திய போதும் அதில் சந்­தே­கத்­துக்கு இட­மான எவ்­வித பொருட்­களும் இருக்­க­வில்லை.இந்­நி­லையில் சந்­தே­க­ந­பரை விசேட சோத­னைக்கு உட்­ப­டுத்­திய பொலிஸார் அதிலும் சந்­தே­கத்­துக்­கி­ட­மான எத­னையும் கண்­ட­றி­ய­வில்லை.

இந்­நி­லையில் குறித்த பாகிஸ்­தா­னி­யரை எக்ஸ்ரே சோத­னை­க­ளுக்கு உட்­ப­டுத்த தீர்­மா­னித்­த­துடன் அதன்­போது உடலில் சந்­தே­கத்­துக்கு இட­மான திர­வி­யங்கள் இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.இத­னை­ய­டுத்து குறித்த நபரை நீர்­கொ­ழும்பு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்த பொலிஸார் அவர் விழுங்­கி­யி­ருந்த ஹெரோயின் அடங்­கிய 45 வில்­லை­களை வெளியே வைத்­தி­யர்­களின் உத­வி­யுடன் எடுத்­துள்­ளனர்.

அந்த வில்­லை­களில் இருந்த ஹெரோயின் சுமார் 400 கிராம் நிறை­கொண்­டது என பொலிஸார் தெரி­வித்­தனர்.சந்தேகநபர் பொலிஸாரின் பாதுகாப்பில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொட ர்ந்து சிகிச்சை பெறும் நிலையில் மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் தடுப் புப் பிரிவு முன்னெடுத்துள்ளது.