மூன்று வருட போராட்டத்துக்கு பின் தாயுடன் இணையும் குழந்தை: இன்ப அதிர்ச்சி அளித்த கனெடிய அரசாங்கம்!!

347

mom_canada_001

மூன்று வருட போராட்டத்துக்கு பின் தாயுடன் சேர்ந்து வாழ்வதற்காக இந்தியாவை சேர்ந்த குழந்தைக்கு குடியேற்ற அனுமதியை கனெடிய அரசாங்கம் வழங்கியுள்ளது. கனடாவின் ஒட்டாவா பகுதியை சேர்ந்தவர்கள் பாவ்னா பஜாஜ் மற்றும் அவரது கணவர் அமான் சோட்.இந்தியர்களான இவர்கள் கனடாவில் வேலை கிடைத்ததால் நிறந்த குடியேற்ற அனுமதி கேட்டு கடந்த 2011ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தனர்.இந்நிலையில் 2011ஆம் ஆண்டு யூன் மாதம் பாவ்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தைக்கு தாக்‌ஷ் என்று அவர்கள் பெயர் வைத்தனர். தங்களுக்கு அனுமதி கிடைத்த பின் குழந்தைக்கு அனுமதி வாங்கிகொள்ளலாம் என்று அவர்கள் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர்.இந்நிலையில் விண்ணப்பத்தில் குழந்தையின் விவரங்கள் இல்லாததால் எதிர்காலத்தில் கனடாவில் வசிப்பதற்கு அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதியினர் தங்களின் குழந்தைக்கு குடியுரிமை வழங்கவேண்டும் என்று கோரி கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.இது தொடர்பாக குடியுரிமை அமைச்சர் ஜோன் மெக்குலத்திடமும் (John Mccallum) அவர்கள் வேண்டுகொள் வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 23ஆம் திகதி பாவ்னாவை அலைபேசியில் தொடர்பு கொண்ட குடியுரிமை வழங்கல் அமைச்சர் ஜோன் மெக்குலம், கனடாவில் வசிப்பதற்காக உங்கள் குழந்தைக்கு தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.இந்த செய்தியினால் பாவ்னா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.கனெடிய அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு தனது நன்றியை தெரிவித்துகொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும் தனது குழந்தையை வரவேற்பதற்காக ஏராளமான பரிசு பொருட்களை வாங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.