விஜய் மனைவியை பாராட்டிய பிரபல பாடகர்

478

srinivas_vijay_wife001

விஜய்யை பாராட்டிய நிறைய பிரபலங்களை பார்த்திருப்போம். தற்போது விஜய்யின் மனைவி சங்கீதாவை பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் பாராட்டியுள்ளார்.அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், விஜய் அவரது மனைவி சங்கீதா இருவரையும் விமானத்தில் சந்திக்க நேர்ந்தது. விஜய்யின் மனைவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தீவிர ரசிகர் என்பதையும் புரிந்து கொண்டேன்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பாடகர்களின் பெயர்கள் பலரை சங்கீதா நினைவில் வைத்திருந்தது என்னை ஆச்சரியமடைய செய்தது. எலிமினேட் ஆன சிங்கர்களின் பெயர்களை கூட சங்கீதா என்னிடம் கூறி அவர்களுடைய திறமையை பற்றி பேசியது என்னை ஆச்சரியத்தின் உச்சத்திற்கே அழைத்து சென்றது என்று பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.