வடமாகாணசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கான வவுனியா மாவட்டத் தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்று மதியம் 12 மணியளவில் வவுனியா கச்சேரியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதற்கு முன்னதாக வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சிந்தாமனி பிள்ளையார் ஆலயத்தில் வழிபட்டு சிறப்பு பூசைகளிலும் ஈடுபட்டனர். வவுனியா மாவட்டத்திலிருந்து 6 பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் விபரம்
இலங்கை தமிழரசுக்கட்சி
1. எம்.எம்.ரதன் ஆசிரியர் (பதில் தலைவர் – நகரசபை வவுனியா)
2. வைத்திய கலாநிதி எஸ்.சத்தியலிங்கம்
ரெலோ
3. செந்தில்நாதன் மயூரன் (வர்த்தகர்)
4. துரைச்சாமி நடராஜசிங்கம் (துணை தவிசாளர் வவுனியா பிரதேசசபை)
ஈ.பீ.ஆர்.எல்.எப்
5. எம்.நடராஜா (முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர்)
6. ஆர்.இந்திரராஜா (முன்னாள் பிரதிகல்விப்பணிப்பாளர்)
7. எஸ். தியாகராஜா (ஓய்வு பெற்ற கிராம அலுவலர்)
புளொட்
8. ரீ.லிங்கநாதன் ((வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவர்)
9. க.சந்திரகுலசிங்கம் (வவுனியா நகரசபையின் முன்னாள் உப தலைவர்)