வவுனியாவில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!

401

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று (25.12.2015) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. வவுனியா வடக்கு நெடுங்கேணி பிரதேசத்தில் விசேட தேவைக்குட்பட்டோரின் அமைப்பான இணையும் கரங்கள் அமைப்பில் அங்கத்துவம் பெறும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிள்ளைகளுக்கே இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இணையும் கரங்கள் அமைப்பின் தலைவர் சசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கலந்துகொண்டு கற்றல் உபகரணங்களை வழங்கினார்.

பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலியின் சமுகப்பணி பிரிவுக்கு பொறுப்பான திரவியநாதன் ஐயாவின் ஒழுங்கமைப்பில் பிறேமா கைலைநாதன், விமலா சந்திரன். ராஜரெட்ணம் ஆகிய உறவுகள் நிதியுதவி வழங்கியிருந்தனர்.

ரி.ஆர்.ரி வானொலி நிர்வாகத்தினருக்கும், நிதியுதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கும் இணையும் கரங்கள் அமைப்பினர் தமது நன்றியை தெரிவித்தனர்.

1372_986814681380537_461722605841466394_n 3475_986813384714000_4904712296763502185_n 940878_986813618047310_5261587464981415348_n 1604735_986815228047149_3962427567083483243_n 1915614_986813668047305_1166853108345824844_n 1917685_986812554714083_5179937115747929939_n 1919573_986812871380718_3658443546524498906_n 1935690_986815101380495_8734601437180025130_n 10256186_986815024713836_7948130404202561141_n 10297719_986813364714002_6358894359194508268_n 10338308_986812848047387_178809098858390600_n 10355906_986812764714062_8112668218577585179_n 10382141_986813394713999_7967968692568575280_n 10398485_986814881380517_2227711071273886900_n 10584071_986812578047414_2552417474367556704_n 12391432_986813084714030_2028262178511753270_n 12391806_986814191380586_8489298527128870466_n 12391850_986814714713867_5662604334643647859_n 12391938_986814981380507_7594580024439525018_n