மதுபான போத்தல்களில் நகைகளை கடத்தியவர் கைது!!

498

1 (8)

சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 10 இலட்சத்து 75 ஆயிரத்து 350 ரூபா பெறுமதியுடைய தங்க நகைகளுடன் நபர் ஒருவர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் விமான நிலைய சுங்கப்பிரிவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் எனவும் சந்தேக நபரிடமிருந்து சுமார் 2 கிலோகிராம் நிறையுடைய நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நான்கு பொதிகளில் 363 தங்க மாலைகள் மற்றும் 7 தங்க கைச்சங்கிலிகளை சூட்சமமான முறையில் மறைத்து நாட்டிற்குள் கடத்திவந்துள்ளார்.சந்தேகநபரிடம் சுங்கப் பிரிவினர் தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்