ஆபாசமாக பேசிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த பூஜா!!

235

PoojaUma_L

ஜேஜே, அட்டகாசம், ஓரம்போ, நான் கடவுள் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் பூஜா. இவர் சமூக வலைத்தளத்தில் தன்னை பற்றி ஆபாசமாக பேசிய ரசிகருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.இவரின் புகைப்படத்திற்கு கீழ் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அவரின் உடல் குறித்து வர்ணித்தார்.

இதனால் கோபமான அவர் ‘என்னை ஆபாசமாக வர்ணித்த உன்னை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். நீயும் ஒரு பெண்ணிடம் இருந்து தான் வந்திருக்கிறாய், உன் சகோதரி, தாயும் ஒரு பெண் என்பதை மறந்து விடாதே, நீ திருந்தி வாழ இன்னும் அவகாசம் உள்ளது’ என பதிலடி கொடுத்துள்ளார்.