2 மணித்தியாலங்களில் 45 பர்கர்களை உட்கொண்ட அழகுராணி!!

514

Nela-Zisser

நியூ­ஸி­லாந்தைச் சேர்ந்த அழ­கு­ரா­ணி­யொ­ருவர் 2 மணித்­தி­யா­லங்­களில் 45 பர்­கர்­களை உட்­கொண்­டுள்ளார். 23 வய­தான நேலா ஸிசர் எனும் இந்த யுவதி 2013 ஆம் ஆண்டு மிஸ் ஏர்த் நியூ­ஸி­லாந்து அழ­கு­ரா­ணி­யாக தெரி­வானார். அவ்­வ­ருடம் பிலிப்­பைன்ஸில் நடை­பெற்ற மிஸ் ஏர்த் அழ­கு­ராணி போட்­டி­யிலும் நியூஸிலாந்து சார்பில் அவர் பங்­கு­பற்­றினார். ஆனால், இறு­திச்­சுற்றுப் போட்­டிக்கு முன்னர் அவர் உட்­கொண்ட உணவு நஞ்­சா­னதால் அப்­போட்­டி­க­ளி­லி­ருந்து வில­கினார். ஆனால், தற்­போது உணவு உட்­கொள்­வதில் பல்­வேறு சாத­னை­களை அவர் படைத்து வரு­கிறார்.

மெல்­லிய உடற்­தோற்­றத்­துடன் காணப்­படும் அவர் நம்ப முடி­யாத அளவு உண­வு­களை உட்­கொள்­கிறார். அண்­மையில் 100 மெக்­டொனால்ட்ஸ் பர்­கர்­களை உட்­கொண்டு அவர் உலக சாதனை படைக்க முயற்­சித்தார். ஜப்­பானைச் சேர்ந்த யுகா எனும் 62 பர்­கர்­களை உட்­கொண்­ட­மையே பெண்­ணொ­ருவர் பர்கர் உட்­கொள்­வதில் உலக சாத­னை­யாக உள்­ளது. இச்­சா­த­னையை முறி­ய­டிக்கும் முயற்­சியில் நேலா இறங்­கினார்.ஆனால், இரு மணித்­தி­யா­லங்­களில் 45 பர்­கர்­களை உட்­கொண்­ட­வுடன் அவர் இம்­மு­யற்­சியை கைவிட்டார். இந்த சவா­லுக்­காக தான் விசேட பயிற்­சியில் ஈடுபட்டிருந்ததாகவும் வித்தியாசமான சோஸ் வகைகளை இதற்குப் பயன்படுத்தியதாகவும் நேலா ஸிசர் கூறினார்.