
தெற்கு கடற் பகுதியில் விபத்துக்குள்ளான படகில் இருந்த மீனவர்கள் குழுவொன்றை மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். விபத்துக்குள்ளான குறித்த மீன்பிடி படகு கடந்த 25ம் திகதி தெவுந்தரை கடற்பகுதியில் இருந்து மீன்டிக்க கடலுக்கு சென்றுள்ளது. அந்தப் படகில் 05 மீனவர்கள் சென்றுள்ளனர்.
இந்நிலையில் அந்தப்படகு நேற்று பிற்பகல் விபத்துக்கு உள்ளாகியுள்ளதுடன், பேருவளை பிரசேத்தில் இருந்து மீன்டிக்க படகில் சென்ற மீனவர்கள் குழுவொன்று விபத்துக்குள்ளான படகில் இருந்த நால்வரை காப்பாற்றியுள்ளனர்.
எவ்வாறாயினும் மற்றொரு மீனவர் காணமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணிகள் இடம்பெறுகின்றன. விபத்துக்குள்ளான படகில் இருந்து காப்பாற்றப்பட்ட மீனவர்களை தெவுந்தரை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





