அம்பாறையில் கடும் காற்று, சில வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதம்!!

476

maxresdefault (1)

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 4 கிராம சேவகர் பிரிவில் நேற்று மாலை 4 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக கிராமத்தில் சில வீடுகள், மற்றும் வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன. திடீரென வீசிய கடும் காற்று காரணமாக விநாயகபுரம் சிவன் ஆலயத்திற்கு முன்பாக செல்லும் வீதியில் அமைந்துள்ள 2 குடியிருப்புக்களும், ஒரு வர்த்தக நிலையமும் முற்றாக சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரிதொரு வர்த்தக நிலையம் மற்றும் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.சில மரங்களும் முறித்து வீழ்ந்துள்ளன.இந்த அனர்த்தம் தொடர்பாக கிராம சேவகர் திருக்கோவில் பிரதேச செயலாளருக்கு அறியப்படுத்தியதுடன் பிரதேச செயலாளர் அம்பாறை அனர்த்த முகாமைத்து பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இந்த அனர்த்தத்தில் மூன்று ஆண்கள் காயமடைந்து திருக்கோவில் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.