தலைவாவுக்கு அதிகபட்ச தியேட்டர்கள்.. சின்னப் படங்கள் இன்னும் 2 வாரங்கள் காத்திருக்க வேண்டும்!

536

thalaiva

விஜயின் தலைவா படத்துக்கு அதிகபட்சமாக தியேட்டர்களை ஒதுக்க திரையரங்க உரிமையாளர்கள் முடிவு செய்திருப்பதால் சிறிய பட்ஜெட் படங்கள் மேலும் காத்திருக்க வேண்டிய நிலை.

விஜய் நடித்துள்ள தலைவா வரும் ஆகஸ்ட் 9ம் திகதி ரம்லான் ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்தப் படத்துக்கு நகரங்களில் அதிகபட்ச மல்டிப்ளெக்ஸ் ஸ்க்ரீன்களும், கிராமம் சார்ந்த நகரங்களில் இருப்பதிலேயே நல்ல தியேட்டர்களையும் ஒதுக்கியுள்ளனர்.

அதிகபட்ச அரங்குகளை ஒதுக்கு முதல் வாரத்திலேயே வசூல் பார்க்க இந்த யுத்தி (படம் குறித்து எதிர்மறை பேச்சு நிலவுவதால்). தலைவா அதற்கு அடுத்த வாரமே ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் வருகிறது.

பொதுவாக இந்த நாளில் பண்டிகைக்கு வெளியாவது போல நான்கைந்து படங்கள் வருவது வழக்கம். இந்த முறையும் 6 படங்கள் வெளியாகத் தயாராக உள்ளன. ஆனால் தலைவாவுக்கே அதிக தியேட்டர்கள், அதுவும் இரண்டு வாரங்களுக்கு தரப்பட்டுள்ளதால், மற்ற படங்களுக்கு போதிய அரங்குகள் இல்லை.

எனவே தேசிங்கு ராஜா மற்றும் ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்கள் மட்டும் இருக்கும் தலைவாவுக்கு ஒதுக்கியது போல மிச்சமிருக்கும் தியேட்டர்களில் வெளியாகின்றன. தங்க மீன்கள், ரகளபுரம் போன்றவை இந்த முறையும் தியேட்டர்களின்றி காத்திருக்கின்றன.