உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களுக்கெதிராக நடவடிக்கை!

702

தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களை பிரதேச நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து நீக்குவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அவர்களை தங்கியிருக்குமாறு அண்மையில் வெளியிடப்பட்ட விசேட சுற்றுநிருபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பி.பீ.அபேகோன் தெரிவித்துள்ளார்.

பிரதேச நிர்வாகத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.பதவிகளிலிருந்து நீக்கப்படும் அதிகாரிகளின் வெற்றிடங்களுக்கு வேறு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பட்சத்தில் அது குறித்து உடனடியாக அறிவிக்குமாறு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது