கிளி பிறந்த நாளை கொண்டாடிய குடும்பம்!!

942

indian-parrot-3d-model

சத்தீஸ்கர் மாநிலத்தின், மத்பாரா நகரில் வசிப்பவர் சிந்தாமணி ராவ் போன்ஸ்லே. இவர், 25 ஆண்டுகளுக்கு முன், வன அதிகாரியாக பதவி வகித்தார். அப்போது, நாய் ஒன்று, கிளிக்குஞ்சை வாயில் கவ்விக் கொண்டு செல்வதைக் கண்டார். உடனே, நாயை துரத்தி சென்று, கிளியை விடுவித்தார்.

பலத்த காயமடைந்த கிளி குஞ்சை, வீட்டிற்கு எடுத்து வந்து, சிகிச்சை அளித்ததில், அது உயிர் பிழைத்தது. போன்ஸ்லேயும், அவரின் மனைவியும், கிளி குஞ்சுக்கு, ‘மிட்டு’ என, பெயரிட்டு வளர்க்கத் துவங்கினர். அதே ஆண்டு, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்ததால், மகிழ்ச்சியடைந்தனர். குடும்பத்தில் ஒரு உறுப்பினராக மாறிய மிட்டு, போன்ஸ்லேயை, ‘அப்பா’ என்றும், அவரது மனைவியை, ‘மம்மி’ என்றும் அழைக்கும். வீட்டிற்கு யாரேனும் வந்தால், அவர்களின் வரவை தெரிவிக்கும்.கடந்த வியாழக்கிழமை, மிட்டுவின் 26வது பிறந்த நாள். இதையொட்டி, வீடு முழுவதும் அலங்கரிக்கப்பட்டு, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் புடைசூழ, கேக் வெட்டி கொண்டாப்பட்டது.