வவுனியாவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு!!

264

12434286_430881250438529_118365262_n

வவுனியா நகரில் கடந்த வியாழக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்கு நாளை அடையாள அணிவகுப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது..

வவுனியாவில் போக்குவரத்திற்கு இடையூறாகும் வகையில் வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெற்று வந்தன. இதனால் அவ்வாறான வர்த்தகங்களை அங்கிருந்து நிறுத்துமாறு வவுனியா நகர சபை தெரிவித்தது. இதன்படிஇ நகரசபை ஊழியர்கள் கடந்த வியாழக்கிழமை அதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

இதன்போது அங்கு வர்த்தகர்கள் – நகர சபை ஊழிர்கள் இடையே முரண்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் அங்கு செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் மீது அங்கிருந்த வர்த்தகர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டார்.

பின்னர் அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். அவரை இன்று(28.12) வரை விளக்க மறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் குறித்த விடயம் மீண்டும் இன்று விசாரணைக்கு கொண்டு வரப்பட்டது. எனினும் அது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறவில்லை. இந்நிலையிலேயே நாளை(29.12.2015) செவ்வாய்க் கிழமை அங்கு அடையாள அணிவகுப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.