நான் எந்தத் தவறும் செய்யவில்லை..விரைவில் இந்திய அணியில் இடம் பிடிப்பேன் : ஸ்ரீசாந்த்..!!

363

sreesanth

நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று ஆட்டநிர்ணய புகாரில் சிக்கி கைதாகி தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ள ஸ்ரீசாந்த் டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளில் ஆட்டநிர்ணயம் செய்ததாக கைதாகி தற்போது ஜாமினில் விடுதலையாகி வெளியே வந்துள்ளார் ஸ்ரீசாந்த். இந்த நிலையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, ரசிகர்கள் என் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தி..

“நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இதற்குக் காலம் பதில் சொல்லும் என்று நிச்சயம் நம்புகிறேன். தொடர்ந்து கடுமையாக பயிற்சி செய்யப் போகிறேன். காத்திருக்கப் போகிறேன். கடவுள் மகத்தானவர்” என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.

தற்போது கேரளாவில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீசாந்த். இந்திய அணியில் தனக்கு மீண்டும் இடம் கிடைக்கும் என்றும் அவர் நம்புகிறார்.

ஸ்ரீசாந்த் விடுத்துள்ள இன்னொரு ட்விட்டில் “எப்போதுமே நான் சிறந்ததையே கொடுத்துள்ளேன். அதைத் தொடருவேன். என் மீது அனைவரும் நம்பிக்கை வைத்திருங்கள் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்று கூறியுள்ளார் ஸ்ரீசாந்த்.

ஆட்டநிர்ணய விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுக்குள்ளான சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன், ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் அப்பாவிகள், நல்லவர்கள், ஒன்றுமே செய்யாதவர்கள் என பிசிசிஐ விசாரணைக் குழு ஏற்கனவே கூறியுள்ளது. அதே வழியில் ஸ்ரீசாந்த்தும் விடுபடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.