1ம் தர வகுப்பொன்றில் இணைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

504

elemmalestudentstudying_10

2016ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்காக வகுப்பொன்றுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி இது குறித்த சுற்றறிக்கை கல்வி அமைச்சினால், மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், கல்விச் செயலாளர்கள், கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த சுற்றறிக்கைக்கு அமைய, 2016ம் ஆண்டில் முதலாம் தர வகுப்பொன்றில் சேர்த்துக் கொள்ளவுள்ள மாணவர்களின் எண்ணிக்கை 35ல் இருந்து 40 வரை உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் 2016ம் ஆண்டு மட்டும் 40 என்ற எண்ணிக்கை இருக்கவேண்டுமென்றும் அதற்குப் பின்னர், ஒவ்வொரு வருடத்துக்கும் ஒவ்வொரு மாணவர் என்ற வீதம் குறைத்து, 2021ம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆகக் குறைக்க வேண்டும் எனவும், அச் சுற்றிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.