விவியன் ரிச்சட்ஸின் சாதனையை முறியடிப்பாரா விராத் கோஹ்லி..??

332

kohli

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஜாம்பவான் விவியன் ரிச்சட்ஸ் வைத்துள்ள சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு இந்திய அணியின் தலைவர் விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ளது. ஒரு நாள் போட்டிகளில் வேகமாக 5000 ரன்களைக் கடந்தவர் என்ற சாதனைதான் இது. ரிச்சட்ஸ் வசம் உள்ள இந்த சாதனையை முறியடிக்க கோஹ்லிக்கு இன்னும் 425 ரன்கள் தேவைப்படுகிறது.

தற்போதைய இந்திய அணியில் விராத் கோஹ்லி தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடி வருகின்றார். சிம்பாவே அணிக்கு எதிரான போட்டிகளில் தொடர்ந்து அவர் ரன் குவித்து வருகிறார்.
சிம்பாவே அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் அவர் 68 ஓட்டங்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் தொடரையும் வெல்ல உதவினார்.

ஒரு அணித் தலைவராக விராத் கோஹ்லிக்கு கிடைத்துள்ள முதல் ஒரு நாள் தொடர் வெற்றி இது.

ரிச்சட்ஸ் ஒரு நாள் போட்டிகளில் 5000 ஓட்டங்களை எடுக்க 114 போட்டிகள் தேவைப்பட்டது. ஆனால் தற்போது கோஹ்லி 108 போட்டிகளை விளையாடி முடித்துள்ளார்.

அடுத்த ஐந்து போட்டிகளில் அவர் 425 ஓட்டங்களை எடுத்தால் சாதனையை முறியடிக்கலாம். 6 போட்டிகளை எடுத்துக் கொண்டால், ரிச்சட்ஸின் சாதனையை சமன் செய்யலாம்.

இந்தியாவின் கங்குலிதான் இதற்கு முன்பு குறுகிய போட்டிகளில் 5000 ஓட்டங்களை குவித்தவராக இருக்கிறார். அவர் 126 போட்டிகளில் இதைச் செய்துள்ளார்.

அதேபோல மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் லாரா, 118 போட்டிகளில் 5000 ஓட்டங்களை எடுத்துள்ளார். அந்த சாதனையையும் கோஹ்லி முறியடிக்கலாம். ஏற்கனவே விரைவாக 15 ஒருநாள் போட்டி சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.