
புதிய கலப்பு தேர்தல் முறைமையில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடைபெறும் என்பதனை உறுதிபடக் கூறுகின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் 20 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக நாட்டின் தேர்தல் முறைமையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு தேவையான வகையில் கலந்துரையாடல்களையும் பேச்சுவார்த்தைகளையும் நடத்துவோம். அதுமட்டுமன்றி எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் புதிய கலப்பு தேர்தல் முறைப்படி நடைபெறும். விருப்புவாக்கற்ற உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறும். இதன் மூலம் பாரிய மாற்றத்தை நாங்கள் கொண்டுவருவோம் என்றார்.





