
மாணவி ஒருவர் மேலதிக வகுப்பிற்கு பேரூந்தில் செல்ல முற்பட்ட போது, நபர் ஒருவரால் அவரை பலவந்தமாக கீழே இழுத்து, பின்னர் இரத்தினபுரி பிரசேதசத்திற்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.சந்தேக நபர் இவ்வாறு அழைத்து சென்று, தனது நண்பன் வீட்டில் தங்க வைத்து குறித்த மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
தவறிய தொலைபேசி அழைப்பின் மூலம் 15 வயது குறித்த மாணவியும் குறித்த சந்தேக நபரும் காதலில் ஈடுபட்டதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது.திருமணம் செய்வதாக மாணவியிடம் கூறி இவ்வாறு அழைத்து சென்ற 37 வயதான குறித்த சந்தேக நபர் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் முச்சக்கர வண்டி சாரதி எனவும் அவர் இரத்தினபுரி பகுதியில் வைத்து கைது செய்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர்.சந்தேக நபருக்கு வீடு வாடகைக்கு வழங்கிய உரிமையாளர் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பிட்டபெத்தர காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.





