சக மாணவருடன் நெருங்கிப் பழகிய மாணவி: சவுக்கடி வழங்கிய நீதிமன்றம்!!

922

women_caned_public_003

இந்தோனேஷியாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் சக மாணவருடன் நெருங்கிப் பழகிய மாணவிக்கு ஷரியா முறைப்படி நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.இந்தோனேஷியாவில் பல்கலைக்கழகம் ஒன்றில் சக மாணவருடன் நெருங்கிப் பழகியதாக 20 வயதான Elita Nur என்ற மாணவி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அங்கு அமலில் இருக்கும் ஷரியா சட்டத்தின்படி திருமணமாகாத இளம்பெண்கள் ஆண் நண்பர்களுடன் நெருங்கிப் பழகுவது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.இந்த நிலையில், Nur Elita சக மாணவர் ஒருவருடன் நெருங்கி பழகியதால் அவருக்கு ஷரியா முறைப்படி தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து Banda Aceh பகுதியில் அமைந்துள்ள Baiturrahumim பள்ளிவாசலில் அவரை அழைத்துவரப்பட்டு அங்கு அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.பள்ளிவாசலில் குவிந்திருந்த மக்களின் ஆரவாரத்தினிடையே முகமூடி அணிந்த நபரால் அந்த இளம் பெண்ணிற்கு 5 முறை பிரம்படி தண்டனையாக வழங்கப்பட்டுள்ளது.
வலியால் துடித்த அவரை அங்கிருந்து அவசர ஊர்தி வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.