மனநிலை பாதிக்கப்பட்ட யுவதியை துஷ்பிரேயோகம் செய்த நபர் கைது!!

423

1 (10)

புத்தளம், மாம்புரிய தலுவ பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதான, மனநிலை பாதிக்கப்பட்ட யுவதியை துஷ்பிரேயாகம் செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம் பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.சந்தேக நபர் 55 வயதானவர் என்றும் குறித்த யுவதியன் வீட்டுக்கு அருகில் வசித்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

குறித்த யுவதி இதைனை பற்றி பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பெற்றோர்கள் புத்தளம் காவல் துறையினரிடம் முறைப்பாடு செய்த பின்னரே, குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.